ரயில்வே பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள்

By பாரதி ஆனந்த்

ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புக்கு இணங்க பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், புதிய ரயில் அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை.

அதேவேளையில், ரயில் நிலையங்கள், ரயில்களின் சுகாதாரம், புதிய சேவை, வசதிகள் மற்றும் கட்டுமான மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், > புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை ரயில்வே அமைச்சர் தனது பட்ஜெட் உரையிலேயே வேளியிட்டார்.

2015- 16 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் பகல் 12.10 மணிக்கு ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அவரது நிர்வாகத் திறமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் - நிகழ்நேரப் பதிவுகள் வடிவில்:

13.15 PM: வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் வசதிக்காக வீல் சேர்களை ஆன்லைனில் புக் செய்து கொள்ளும் வசதி.

13.10 PM: விவசாயிகளுக்காக கிசான் யாத்ரா ரயில் சேவை துவக்கப்படும்.

13.05 PM: ரயில்வே கார்டுகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்.

13.03 PM: முதியோர் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை.

13.02 PM: பெரு நகரங்கள் சாட்டிலைட் ரயில்வே முனையங்கள் அமைக்கப்படும்.

13.01 PM: 4 பல்கலைக்கழகங்களில், ரயில்வே ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.

12.59 PM: புதிய ரயில்களுக்கான அறிவிப்பு இல்லை.

12.58 PM: புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகள் அமைக்கப்படும்.

12.55 PM: பட்ஜெட் அளவு 52% அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. அதாவது இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவு ரூ.1,11,000 ஆக உள்ளது.

12.52 PM: பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% உயர்வு. | விரிவான செய்திக்கு ->ரயில்வே பட்ஜெட் 2015 : பயணிகள் அறிய வேண்டிய புதிய வசதிகள் |

12.50 PM: தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தடங்களில் பயணிக்கும் பயணிகள் ரயிலின் வேகம் மணிக்கு 110 கி.மீ-ல் இருந்து மணிக்கு 160 முதல் 200 கி.மீ.-வரைஅதிகரிக்கப்படும்.

12.47 PM: நாடு முழுவதும் 3438 ஆள் இல்லா லெவல் கிராஸிங்குகளை ஒழிக்க ரூ.6,750 கோடி ஒதுக்கப்படும்.

12.46 PM: 108 ரயில்களில் இ-கேட்டரிங் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இந்த ரயில்களில் பயணிக்க முன் பதிவு செய்யும் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தங்கள் உணவுக்கான ஆர்டரையும் பதிவு செய்யலாம்.

12.45 PM: குறிப்பிட்ட சில ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

12.42 PM: ரயில் புறப்படும், வரும் நேரம் குறித்து பயணிகள் மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

12.41 PM: சிமென்ட், யூரியா, இரும்பு உள்ளிட்ட 15 வகையான பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

12.40 PM: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புறநகர் ரயில்களிலும், குறிப்பிட்ட தடங்களில் செல்லும் பயணிகள் ரயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். | விரிவான செய்திக்கு ->ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய திட்டங்கள் |

12.38 PM: நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் வை-ஃபை சேவை வழங்கப்படும்.

12.37 PM: பயணிகள் மேல் அடுக்கு படுக்கையில் சுலபமாக ஏற வசதியாக ரயில் பெட்டிகளில் மடக்கு ஏணி வழங்கப்படும்.

12.36 PM: அனைத்து ரயில்களிலும் பொது வகுப்புப் பெட்டிகளிலும் மொபைல் சார்ஜர் வசதி செய்யப்படும்.

12.36 PM: ரயிலில் பயணிக்கு பெண்கள் பாதுகாப்பான திட்டங்களுக்காக 'நிர்பயா நிதி' பயன்படுத்தப்படும்.

12.35 PM: இனிமேல் 60 நாட்களுக்கு பதிலாக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்.

12.31 PM: ரூ.96,182 கோடி மதிப்பில் 9,400 கி.மீ உள்ளிட்ட இரு வழி / மூன்று வழி / நான்கு வழி பாதைகளுக்கான 77 திட்டங்களுக்கு ஒப்புதல். | விரிவான செய்திக்கு - >ரூ.96,182 கோடியில் 77 புதிய ரயில்வே திட்டங்கள் |

12.31 PM: பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒதுக்கீட்டில் 67% அதிகரிப்பு

12.30 PM: முன் பதிவு செய்யாமல் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ரயில் நிலையத்துக்குள் நுழையும் அடுத்த 5 நிமிடங்களுக்குள் ரயில் டிக்கெட்டை பெறுவதை உறுதி செய்யும் வகையில், 'ஆபரேஷன் 5- மினிட்' என்ற சேவை தொடங்கப்படுகிறது.

12.25 PM: பயணிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா சேவை எண் '182' அறிமுகப்படுத்தப்படுகிறது.

12.24 PM: ரயில்வே உதவி எண் '138', அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

12.23 PM: ரயில்வே இருப்புப் பாதை தூரம் 20 % அதிகரிக்கப்படும்.

12.22 PM: தூய்மையான, சுகாதாரமான குடிநீர் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

12.21 PM: ரயில் நிலையம், ரயில் தூய்மையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும்.

12.20 PM: 7000 கழிப்பறைகள் பயோ டாய்லட்டுகளாக தரம் உயர்த்தப்படும். பல்வேறு ரயில் நிலையங்களில் 650 கழிப்பறைகள் அமைக்கப்படும்.

12.20 PM: ரயில் நிலையங்களின் தூய்மையைக் கண்காணிக்க, மேம்படுத்த தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்.

12.15 PM: பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் சுரேஷ் பிரபு

12.15 PM: நாட்டின் மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையை பல்வேறு வகைகளிலும் மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.

12.14 PM: அடுத்த 5 ஆண்டுகளில், ரயில்வே துறையில் ரூ.8.50 லட்சம் கோடி முதலீடு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12.14 PM: அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

12.14 PM: அடுத்த ஐந்து ஆண்டுக்கான லட்சியம்:

1.வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தப்படும்.

2. ரயில் பயணிகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

3. ரயில்வே கட்டுமானம் நவீனப்படுத்தப்படும்.

4. ரயில் இருப்புப் பாதை தூரம் நீட்டிக்கப்படும்.

12.13 PM: ரயில்வே துறையை தொடர்ந்து முடக்கி வரும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். விரிவான வாசிப்புக்கு > புதிய திட்டங்கள்

12.12 PM: ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன: அமைச்சர் தகவல்.

12.11 PM: ரயில்வே துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.

12.10 PM: 2015 - 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் பகல் 12.10 மணியளவில் தாக்கல் செய்தார்.

11. 46 AM: ரயில்வே துறையின் நீண்ட கால திட்டங்களையும், சாமான்ய மக்களின் எதிர்பார்ப்புகளையும் சமன் செய்யும் வகையில் ரயில்வே பட்ஜெட் அமையும்: சுரேஷ் பிரபு.

11.45 AM: ரயில் பயணிகள் பாதுகாப்பு, ரயில்வே கட்டுமானம் மேம்பாட்டில் இந்திய ரயில்வே துறை சர்வதேச தரத்துடன் முன்மாதிரியாக இருக்க வேண்டும்: சுரேஷ் பிரபு.

11.42 AM: ரயில்வே பட்ஜெட் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்.

11.40 AM: ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்துக்கு வந்தடைந்தார் அமைச்சர் சுரேஷ் பிரபு

11.30 AM: நாடாளுமன்றத்துக்கு வந்த அமைச்சர் சுரேஷ் பிரபு, "பயணத்தை சரியான பாதையில் துவக்க வேண்டும். கொல்கத்தா செல்ல வேண்டுமென்றால் கொல்கத்தா ரயிலில் ஏற வேண்டும்.

மாறாக சென்னை ரயிலில் அமர்ந்து கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. இது துவக்கம். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. முதல் ஆண்டிலேயே எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாது" என்றார்.

11.00 AM: கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

10.50 AM: ரயில்வே பட்ஜெட் மீதான எதிர்ப்பார்ப்பினால் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் நேரத்தில் சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்ந்து 29,069.13. புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 18.80 புள்ளிகள் உயர்ந்து 8,786.05 புள்ளிகளாக இருந்தது.

காங்கிரஸ் கண்டனம்:

டீசல் விலை வெகுவாக குறைந்துள்ள நிலையிலும் பயணிகள் கட்டணம் குறைக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்