தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி புகார்

By ஏஎன்ஐ

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற ராமாயண தரிசன கண்காட்சி ஒன்றில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியபோது, மத அடையாளங்களைத் தேர்தல் பிரச் சாரத்துக்காக பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி யுள்ளது.

இதுதொடர்பான வீடியோ ஆதா ரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட் டுள்ளதாவது:

இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமனுடன், தனது தலைமை யிலான அரசின் கொள்கைகளை ஒப்புமைப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ராமாயணக் கதாபாத்திரங்களையும் குறிப்பிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன் படுத்தியுள்ளார். பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக மதத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.

மதத்தின் பேரில் வாக்காளர் களின் உணர்வுகளைத் தட்டி யெழுப்பும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளது. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து இப்பிரச்சினை எழுந்துள்ள தால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் கட்சி யின் கை சின்னத்துடன் ஒப்பிட்டு, மத ரீதியான உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் டெல்லி யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், உச்ச நீதிமன்றம் வகுத்தளித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால், காங்கிரஸின் கை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்