தெலங்கானா மாநிலம், யாத்கிரி குட்டா மண்டலம் ராள்ள ஜனகாமா கிராமத்தைச் சேர்ந்தவர் கூடூரு மதுகர் ரெட்டி. இவர் அமெரிக் காவின் சியாட்டில் நகரில் தனது மனைவி ஸ்வாதியுடன் வசித்து வந்தார். தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இந்த தம்பதிக்கு 7 வயது மகள் உள்ளார். இந்நிலையில் ரெட்டி கடந்த 4-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரெட்டியின் சாவுக்கு மனைவியே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ரெட்டியின் உடல் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வந்த ஸ்வாதியின் மீது ரெட்டியின் உறவினர்கள் தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து யாத்கிரி குட்டா காவல் நிலையத்தில் ஸ்வாதி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் ஸ்வாதி கூறும்போது, “எனது கணவர் மதுகர் ரெட்டியின் சாவுக்கு நான் காரணம் இல்லை. அவர் கடந்த ஓராண்டு காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் விவாகரத்து வழங்குமாறு கேட்டிருந்தேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago