பிஹாரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது பிஹார் வெள்ள நிலவரம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
இந்தச் சந்திப்புக்கு பிறகு நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணை கட்டிய பிறகு கங்கையில் வண்டல் படிந்து அதன் ஆழம் மற்றும் கொள்ளளவு குறைந்துவிட்டது. இதனால் பிஹாரில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. பிஹாருக்கு நிபுணர் குழுவை அனுப்பி அங்குள்ள நிலவரத்தை மதிப்பிடுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். இது தொடர்பாக பிரதமர் விரைவில் உரிய முடிவு எடுப்பார் என நம்புகிறேன். வண்டல் படிவுகளை அகற்றாவிடில் கங்கையில் நீரோட்டம் நின்றுவிடும்” என்றார்.
இதனிடையே பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) சார்பில் கூடுதலாக 10 குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து என்டிஆர்எப் இயக்குநர் ஓ.பி.சிங் கூறும்போது, “ஒடிசாவில் இருந்து 5 குழுக்கள் உ.பி.க்கும் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இருந்து 5 குழுக்கள் பிஹாருக்கும் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. படகுகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இக்குழுக்கள் எடுத்துச் சென்றுள் ளன. இவ்விரு மாநிலங்களுடன் உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்டிஆர்எப் சார்பில் ஏற்கெனவே 56 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago