ஏழைகளுக்கு இலவச மருந்து: மத்திய அரசு பரிசீலனை

By பிடிஐ

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைகளுக்கு அரசு சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் மருந்துகளை இலவச மாக வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:

ஏழைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக அவர்களை சென்றடைய வில்லை. குறிப்பாக பொது விநியோகத் திட்டம் குறித்து பல்வேறு புகார்கள் கூறப்படு கின்றன. எனவே, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களைக் கண்டறிந்து, நலத்திட் டங்கள் அவர்களைச் சென்றடை வதற்கு தேவையான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், ஏழைகளுக்கு மருத்துவ பரிசோதனை, மருந்துகள் இலவச மாக வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை அரசு அதிகாரிகள், வருமான வரி செலுத்துவோர் ஆகியோருக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முறையைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம். இதுகுறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என பாஸ்வான் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசால் கொண்டுவரப் பட்ட உணவுப் பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட் டுள்ளது. அதேநேரம், இதன் பயன் ஏழைகளை முழுமையாக சென்றடைவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்