மேற்கு வங்கம், ஹரியானா, கேரளம் ஆகிய மூன்று மாநில காங்கிரஸ் தலைவர்களை நீக்கி, அவர்களுக்குப் பதிலாக புதிய தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, எம்.பி. அசோக் தன்வார், வி.எம். சுதீரன் ஆகியோர் முறையே மேற்குவங்கம், ஹரியானா, கேரளம் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக இந்த அதிரடி மாற்றங்களை காங்கிரஸ் செய்துள்ளது. மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக பிரதீப் பட்டாச்சார்யா இருந்து வந்தார்.
இளம் தலித் தலைவரான அசோக் தன்வார், ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த புல்சந்த் முலானாவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். தன்வார் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு நெருக்கமானவரும் கூட.
கேரள அரசியலில் மதிக்கத்தக்கவரான சுதீரன், ரமேஷ் சென்னிதாலாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் உள்ள சதீஷன் கேரள மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி உறுதி செய்துள்ளார். ராஜஸ்தானில் சச்சின் பைலட், மத்திய பிரதேசத்தில் அருண் யாதவ் ஆகியோர் மாநில தலைமைப் பொறுப்பில் அமர வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago