முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல மாவோயிஸ்ட்கள் மீண்டும் சதி: 6 முறை வேவு பார்த்ததாக ஆந்திர டிஜிபி தகவல்

By என்.மகேஷ் குமார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல மாவோயிஸ்ட் கள் சதித் திட்டம் தீட்டி, 6 முறை வேவு பார்த்ததாக டிஜிபி சாம்பசிவ ராவ் நேற்று தெரிவித்தார். இதனால் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவை, கடந்த 2003-ம் ஆண்டு திருப்பதி மலைப்பாதையில் வெடிகுண்டு வைத்து கொல்ல மாவோயிஸ்ட்கள் முயன்றனர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஆனால் அவர் கடந்த 2003 முதல் 2014-ம் ஆண்டு வரை எதிர்க் கட்சித் தலைவராக செயல்பட்டார். ஆனால் இப்போது அவர் மீண்டும் முதல்வராகி உள்ளார். இந்நிலை யில், அவரைக் கொல்ல மாவோயிஸ்ட்கள் 6 முறை வேவு பார்த்துள்ளனர்.

இதுகுறித்து மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் விஜயவாடாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமீபத்தில் ஆந்திரா-ஒடிஷா எல்லையில் உள்ள வனப்பகுதி களில் இரு மாநில போலீஸாரும் கூட்டாக இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவோயிஸ்ட்களுக்கும் போலீஸா ருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 31 மாவோயிஸ்ட்கள், ஒரு போலீஸ் காரர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பழிவாங் கும் எண்ணத்தோடு மாவோயிஸ்ட் கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல 6 முறை வேவு பார்த்த தாக மத்திய உளவுத் துறை எச் சரித்துள்ளது. குறிப்பாக டெல்லி யில் உள்ள ஆந்திரா பவனில் பாதுகாப்பு குறைவாக இருப்பதால் அங்கு அவரை கொல்ல முயற்சி நடந்ததாக உளவு துறை எச்சரித் துள்ளது.

முதல்வர் தவிர அமைச்சர் கள், போலீஸ் அதிகாரிகளையும் அவர்கள் கொல்ல திட்ட மிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் முதல்வர் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்