நிலக்கரி சுரங்க முறைகேடு: குற்றப்பத்திரிகை தாக்கல்

By செய்திப்பிரிவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறை கேட்டில் நவபாரத் மின் நிறு வனத்தின் மீது குற்றப் பத்திரி கையை சிபிஐ தாக்கல் செய்தது.

இந்த முறைகேட்டில் முதல் முதலாக தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகை இதுவாகும்.

2006 2009 இடைப்பட்ட காலத்தில் சுரங்க ஒதுக் கீடு பெறுவதற்கான தனது விண்ணப்பத்தில் தவறான தகவல் களை அளித்தது, முறைகேடான வழிமுறைகளை பின்பற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அந்நிறுவனத்தின் மீது சுமத்தப் பட்டுள்ளன.

தனியார் நிறுவனமான நவபாரத் மீது மட்டுமின்றி, அந் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் (பி.திரிவிக்ரம பிரசாத், ஒய்.ஹரிஷ் சந்திரா) மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மது ஜெயின் முன்னிலையில் குற்றப் பத்திரிகையை அரசு தரப்பு வழக்கறிஞர் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 120-பி (குற்றச் சதி ஆலோசனை), 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக் கையில் (எப்.ஐ.ஆர்) நிலக்கரி அமைச்சகத்தைச் சேர்ந்த அடை யாளம் தெரியாத அலுவலர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் நவபாரத் நிறுவனத்தின் ஆவணங்களை சட்டப்படி முறையாக ஆய்வு செய்யாமல் அந்நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் ராம்பியா பகுதியில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்ற பின்பு நவபாரத் நிறு வனத்தின் பங்குதாரர்கள், தங்களின் பங்குகளை எஸ்ஸார் மின் நிறுவனத்துக்கு 2010 ஜூலை மாதத்தில் அதிக லாபத்தில் விற்று, மொத்தம் ரூ.200 கோடி சம்பாதித்து விட்டனர் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்