நாட்டிலுள்ள 12 பெரிய துறைமுகங்களை, ஏப்ரல் 1 முதல், வாரம் ஒரு நாள் பள்ளி மாணவர்கள் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
எண்ணூர் துறைமுகம் வழியாக போர்டு நிறுவன கார்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக, எண்ணூர் துறைமுகம் மற்றும் போர்டு நிறுவனத்தினரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், "நாட்டிலுள்ள 12 பெரிய துறைமுகங்களை நேரில் பார்ப்பதற்கு, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும். வரும் ஏப்ரல் முதல் வாரம் ஒரு நாள், பள்ளிக்குழந்தைகளுக்கு, துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் பள்ளிகள் இடையே பேசி அனுமதி அளிக்கப்படும். இதற்குரிய பாதுகாப்பு வசதிகளை இன்னும் இரண்டு மாதங்களுக்குள், துறைமுக நிர்வாகம் அனுமதியளிக்கும்" என்றார் ஜி.கே.வாசன்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago