ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதற்காக குலதெய்வ கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்திய பி.வி.சிந்து

By என்.மகேஷ் குமார்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, ஹைதராபாத்தில் உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு நேற்று குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினார்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸில் இறகுப் பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ஹைதராபாத்தை சேர்ந்த பி.வி. சிந்து. இதற்காக இவருக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. பதக்கத்துடன் நாடு திரும்பிய இவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

முன்னதாக, பதக்கம் வென்றால் ஹைதராபாத் லால்தர் வாஜ் பகுதியில் உள்ள தனது குலதெய்வமான மஹங்காளி கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்து வதாக சிந்து வேண்டிக் கொண்டார். இதன்படி, நேற்று காலையில் மஹங்காளி கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற சிந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

இன்று கார் பரிசளிக்கிறார் சச்சின்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யு கார் பரிசளிக்கப்படும் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்தார். இதன்படி, இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், பி.வி. சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர் மற்றும் சிந்துவின் பயிற்சியாளர் கோபி சந்த் ஆகியோருக்கு சச்சின் காரை பரிசாக அளிக்க உள்ளார். சிந்துவின் ஆசைப்படி அவருக்கு சிவப்பு நிற பிஎம்டபிள்யு காரை பரிசளிக்க உள்ளார் சச்சின்.

குவியும் விளம்பர வாய்ப்புகள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதால் சிந்துவுக்கு விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக, பல்வேறு நிறுவனங் களைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரிகள் சிந்துவின் வீடு முன்பு வரிசையில் காத்திருக்கின்றனர்.

பதக்கம் வெல்வதற்கு முன்பே சிந்து சில விளம்பரங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். மேலும் சில நிறுவனங்களும் தற்போது தங்களுடைய விளம்பரத்தில் நடிக்க வேண்டுமென சிந்துவை கோரி வருகின்றனர்.

இதற்கு முன்பு சிந்து ஒரு விளம்பரத்துக்கு ரூ.20 லட்சம் வரை சம்பளம் பெற்றார். ஆனால் இப்போது, விளம்பரத்தில் தோன்ற சிந்துவுக்கு ரூ.2 கோடி வரை கொடுக்கவும் நிறுவனங்கள் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்