பால் தாக்கரே மீது பாஜக-வுக்கு ஏன் புதிய மரியாதை?- சிவசேனா சாடல்

By பிடிஐ

பால் தாக்ரேவுக்கு மோடி அளிக்கும் மரியாதையை வரவேற்கிறோம். இருப்பினும் இந்த மரியாதை தொகுதி பங்கீட்டின் போது இல்லாமல் போனது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

பாஜக - சிவசேனா இடையிலான கூட்டணி முறிந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே நிற்கின்றன. இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வரும் 15-ம் தேதி தேர்தலையொட்டி, அங்கு பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில், சிவசேனா கட்சியை விமர்சித்து தான் எதுவும் பேசப் போவதில்லை என்று, மறைந்த பால் தாக்கரே மீது தான் அளவு கடந்த மரியாதை வைத்துள்ளதாகவும், அதனால் அவர்கள் கட்சிக்கு எதிராக எந்த விதத்திலும் விமர்சனம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, மோடியின் இந்த கருத்தை குறிப்பிட்டு பா.ஜ.க-வை சிவ சேனா கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி தலைவர் பால் தாக்கரே மீது உள்ள மரியாதையின் காரணமாக எங்கள் கட்சியை விமர்சிக்க மாட்டேன் என்று கூறி உள்ளார். நாங்களும் பிரதமர் மீது மதிப்பு கொண்டுள்ளோம்.

ஆனால் தொகுதி பங்கீடின்போது, எங்களை பின்னால் இருந்து குத்தியவர்களுக்கு அப்போதெல்லாம் பால் தாக்கரே மீது உள்ள மரியாதை நினைவில் இருக்கவில்லையா? அப்போது உங்களுக்கு இந்துத்துவா தத்துவங்கள் மறந்து போனதா?" என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்