தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், காச்சிராஜு கூடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவர்தன். இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதியினரின் 2-வது மகன் சந்தீப் (1). குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வந்தது. அன்று, தாய் சுனிதா,குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து உணவு ஊட்டி உள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக குழந்தையின் தொண்டை குழியில் உணவு சிக்கிக் கொண்டது. இதனால் குழந்தைக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்ற னர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தீப்பின் பிறந்த தினமே நினைவு தினமாகிவிட்டதே எனக் கூறி பெற் றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago