ஹுத்ஹுத் புயல் விளைவு: வேலையிழந்த மீனவர்கள்

By சந்தோஷ் பட்நாயக்

ஹுத்ஹுத் புயல் தாக்கத்தினால் மீனவர்களின் படகுகள் கடுமையாக சேதமடைந்ததால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.

ஹுத்ஹுத் புயற்காற்றின் அனைத்துச் சீற்றங்களையும் விசாகப்பட்டிணம் துறைமுகம் கண்டது. இதில் சுமார் 60 விசைப்படகுகள் கடலில் மூழ்கின. மேலும் 250 படகுகள் கடும் சேதமடைந்துள்ளன.

இதனால் மீனவர்கள் தற்போது வேலையின்றி வாடிவருகின்றனர். படகு உரிமையாளர்களும் மீனவர்களும் ஹூத்ஹூத் புயல் ஏற்படுத்திய சேதத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்களது துயரத்திற்கு விசாகப்பட்டிணம் துறைமுக நிர்வாகமே காரணம் என்று கடுமையாக சாடியுள்ளனர். சுமார் 500 விசைப்படகுகளை துறைமுகத்தின் உட்பகுதிக்குக் கொண்டு செல்லும் மீனவர்களின் கோரிக்கையை துறைமுக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இது குறித்து படகு உரிமையாளர் சத்ய நாராயண மூர்த்தி, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “எங்களுடைய ஈடுகட்ட முடியாத இழப்பிற்கு துறைமுக நிர்வாகமே காரணம். நீண்ட நாட்களுக்கு நாங்கள் வேலையற்றவர்களாகி விட்டோம்” என்றார்.

இவர் மட்டுமல்ல படகு உரிமையாளர்கள் பலரும் துறைமுக நிர்வாகத்தையே சாடினர்.

கைவிடப்பட்ட படகுகளும், நீதிமன்ற வழக்குகள் காரணமாக பல படகுகளும் மீன்பிடித் துறைமுகத்தின் பல இடங்களை ஆக்ரமித்துள்ளது.

ஹூத்ஹூத் புயல் பற்றி படகு உரிமையாளர்கள் கூறும்போது, “இது போன்ற அச்சுறுத்தும் பேரலைகளை நாங்கள் எங்கள் வாழ்நாளில் கண்டதில்லை. இவ்வளவு வேகமான காற்றையும் எங்கள் 40 ஆண்டுகால மீன்பிடி வரலாற்றில் கண்டதில்லை.

பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தப் புயல், சகஜ நிலை திரும்புவதற்குள் இரண்டு வேளை முழு சோறு கிடைக்குமா என்பதற்கு உத்திரவாதமில்லை” என்று கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்