ஆந்திர மாநிலத்தில் நில ஊழல் வழக்கில் மேலவை உறுப்பினர் (எம்எல்சி) உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் ரெட்டி. இவர் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் மேலவை உறுப்பினராக உள்ளார். மாநிலத்தின் மிகவும் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் கடந்த 2012-ல் நடந்த தேர்தலின்போது, தனக்கு ரூ.6,781 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஹைதராபாத் குற்றப் பிரிவு போலீஸில் இவர் மீது நில ஊழல் புகார் செய்யப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தைப் போலி பத்திரம் தயாரித்து தனதாக்கிக் கொண்டதாக அதில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தனது முஸ்தபா அறக்கட்டளை சார்பில் போலி பத்திரங்களை, தயாரித்து தெலங்கானா அரசுக்கு சொந்தமான ஆசிஃப் நகரில் உள்ள ரூ.163 கோடி மதிப்புள்ள 178 ஏக்கர் நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் பேரில் தீபக் ரெட்டி மற்றும் அவரது வழக்கறிஞர் சைலேஷ் சக்சேனா உட்பட மூன்று பேரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். இவர்களை ஹைதராபாத் நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, மூவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் இவர்கள் மூவரும் செஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago