ஹுத்ஹுத் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகப்பட் டினம் விமான நிலைய சேவைகள் இன்று முதல் செயல்படத் தொடங் கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று ஹைதரா பாத்தில் மத்திய விமானப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘ஹுத் ஹுத்’ புயல் தாக்குத லால் விசாகப்பட்டினம் விமான நிலையம் கடுமையாக பாதிக்கப் பட்டது. இதனால் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப் பட்டன. புயல் தாக்கத்தை விமான நிலைய அதிகாரிகள், ஊழியர் கள் சாமர்த்தியமாக எதிர்கொண்ட தால் ஓர் உயிர் சேதம் கூட ஏற் படவில்லை. ஆனால் அதிகள வில் பொருட்சேதம் ஏற்பட்டது.
இப்போது இதன் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளன. எனினும் சர்வதேச சேவைகள் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
பலி 38ஆக உயர்வு
கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘ஹுத் ஹுத்’ புயல் தாக்குதலுக்குள்ளான விசாகப்பட்டினம், விஜய நகரம், காகுளம் ஆகிய மாவட்டங்களில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, 11,318 வீடுகள், 12,138 மின் கம்பங்கள் சேதமடைந் துள்ளன. மேலும் 8,742 கால் நடைகள் உயிரிழந்ததுடன், 219 இடங்களில் ரயில் தண்ட வாளங்கள், சாலைகள் பழுதடைந் துள்ளன.
19 நீர் தேக்க கால்வாய்கள் சேதமடைந்துள்ளதுடன் மீனவர் களின் 181 படகுகள் நாசமாகி உள்ளதாகவும் முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கு அதிகாரிகள் அனுப்பி உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago