பிரதமர் மோடி ஏற்படுத்திய ஜவாஹர்லால் நேருவின் 125வது பிறந்தநாள் விழா குழுவில் நேரு குடும்பத்தினர் யாரும் இடம் பெறவில்லை. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித் துள்ளது. அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியடைந்த பிறகு, ஐந்து நாட்கள் கழித்து அப்போதைய வெளிச்செல்லும் பிரதமரும், நேரு பிறந்ததின கொண்டாட்ட விழாக் குழுவின் தலைவருமான மன்மோகன் சிங்கிடம் மே 21ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜினாமா கடிதம் ஒன்றைக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், ‘நேரு 125வது பிறந்ததினக் கொண்டாட்ட விழாக் குழுவில் இருந்து நான் விலகுகிறேன். இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கும் சோனியா வின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார். அதனால் நேரு குடும்பத்தினர் யாரும் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago