மக்களவையில் உறுப்பினர்எல்.ராஜகோபால் மிளகுப்பொடி ஸ்பிரே அடித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு உரிமைக் குழுவுக்கு தலைவர் மீரா குமார் பரிந்துரைத்துள்ளார்.
தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க இந்த குழுவுக்கு அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மக்களவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பிப்ரவரி 13-ம் தேதி மக்களவையில் உறுப்பினர் எல்.ராஜகோபால் மிளகுப்பொடி ஸ்பிரேயை அடித்ததில், பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்குமாறு விதிமுறை எண் 227-ன்படி உரிமைக் குழுவுக்கு அவைத் தலைவர் மீரா குமார பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த குழு விரைவில் அறிக்கை அளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் இந்தக் குழுவில் மூத்த காங்கிரஸ்
தலைவர் பி.சி.சாக்கோ தலை மையில் 15 பேர் உறுப்பினர் களாக உள்ளனர்.
குற்றம் நடைபெற்றிருப்பதை கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட வர்களுக்கு சிறை உள்ளிட்ட தண்டனைகளை விதிக்க இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
கடந்த 13-ம் தேதி தெலங்கானா மசோதாவை அரசு தாக்கல் செய்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரகளையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியி லிருந்து நீக்கப்பட்ட
எல்.ராஜகோபால் உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரேயை அடித்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 3 உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இது நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்ட கறை என்று மீரா குமார் வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடக்கிறது. இதில், உறுப்பினர்களை சோதனையிட்டு அவைக்குள் அனுமதிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago