வாக்காளர் அட்டை பயன்பாடு: நாகாலாந்தில் இதுவே முதல்முறை

By செய்திப்பிரிவு

நாகாலாந்து மாநில மக்கள், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை முதல்முறையாக வரும் மக்களவை தேர்தலில் பயன்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி செந்தியாங்கர் கூறுகையில், “தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி மாநிலத்தின் ஒரேயொரு மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறும். தேர்தல் ஆணைய உத்தரவை ஏற்று மாநிலத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இத்தேர்தலில் முதல்முறையாக பயன்பாட்டுக்கு வருகிறது.

மாநிலத்தில் 11.74 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை 11.61 லட்சம் புகைப்படங்களை மட்டுமே சேகரித்துள்ளனர். பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் எஞ்சிய வாக்காளர்கள் தங்கள் புகைப்படத்தை சமர்ப்பிக்கவில்லை. மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி விரைவில் முடிவடையும்.

கடந்த மக்களவை தேர்தலுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் வாக்காளர் எண்ணிக்கை 1.43 லட்சம் குறைந்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்