உயிருடன் இருப்பவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

உயிருடன் உள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் 3 பேர் இறந்துவிட்டதாகக் கூறி, அவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் அஞ்சலி செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசும் போது, சமூகத்துக்காகப் போராடி உயிரிழந்த 4 சமூக ஆர்வலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அவர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளில், குஜராத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடி, சமூகத்துக்காக உயிர்துறந்த நான்கு பேருக்கு என் இதயத்தின் அடிப்பகுதியிலிருந்து அஞ்சலி செலுத்துகிறேன்” என்றார். அமித் ஜேத்வா, பாகு தேவானி, ஜெய்சுக் பாம்பானியா, மணிஷா கோஸ்வாமி ஆகிய நான்கு பேர் இறந்து விட்டதாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆனால், இதில் அமித் ஜேத்வா மட்டும் கடந்த 2010ல் குஜராத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கொல்லப்பட்டார். அவரை சுரங்க மாபியாக்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மற்ற மூவரும் நல்ல உடல்நிலையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தேவானி(64) வழக்கறிஞராக உள்ளார். அவர் கூறுகையில், “மூன்றாண்டுகளுக்கு முன் தாக்கப்பட்டேன். தற்போது பூரண உடல்நலத்துடன் உள்ளேன். ஊழலுக்கு எதிராகவும் போராடி வருகிறேன். விரைவிலேயே ஆம் ஆத்மியில் இணைவேன்” என்றார்.

தேவானி, ஜெய்சுக் பாம்பானியா, மணிஷா கோஸ்வாமி ஆகிய மூவருமே தாக்குதலுக்கு இலக்காகி உயிர் தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆம் ஆத்மியின் குஜராத் மாநில அமைப்பாளர் சுக்தேவ் படேல் கூறுகையில், “கேஜ்ரிவால் இந்தப் பெயர்களைக் கூறும்போது நான் அங்கு இல்லை. ஆனால் நிச்சயமாக இத்தகவலைச் சரிபார்ப்பேன்” என்றார்.

இந்தப் பகுதியை நல்லா ஒளிபரப்புங்க

தனது பேட்டியின் சில பகுதிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பும்படி தொலைக்காட்சி நிருபரிடம் ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுக்கும் காட்சி யூடியூப் தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பதவியிலிருந்து கேஜ்ரிவால் விலகிய பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

பேட்டி முடிந்த பின், அந்தத் தொலைக்காட்சி செய்தியாளரிடம் பேட்டியின் குறிப்பிட்ட பகுதிகளை அதிக முறை ஒளிபரப்பும்படி கேஜ்ரிவால் கேட்டுக் கொள்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளரும் கேஜ்ரிவாலும் பேசிக் கொள்கின்றனர். “நாங்கள் அதை ஒளிபரப்புகிறோம். பகத் சிங் விஷயம் நன்றாக இருக்கிறது. அதற்கு நிறைய வரவேற்பு இருக்கும்” என செய்தியாளர் பதில் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோ தற்போது யூ டியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. ஊடகங்கள் ஒருசார்பாக நடந்து கொள்வதாகவும், தனக்கு எதிராக ஊடகங்கள் செயல்படுவதாகவும் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அதே ஊடகத்தில் தனக்குச் சாதகமாக பேட்டியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பும்படி அவர் கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்