‘கிரீமி லேயர்’ வரம்பை முடிவு செய்ய பெற்றோர் வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். தனிநபரின் வரு மானத்தை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்கும்போது, ‘கிரீமி லேயர்’(வசதி படைத்தோர்) பட்டியலை ஒதுக்கி விட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அரசியல் சாசன பதவிகளில் இருப்பவர்களின் வாரிசுகள், ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு வருவாய் உள்ளவர்களின் வாரிசுகள் ஆகியோர் இப்பட்டிய லில் இடம்பெற்றவர் களாக அறிவிக்கப் பட்டனர். இப் பட்டியலை முடிவு செய்யும் பொறுப்பு மாநில அரசு களிடம் வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் ஒருவர், அம் மாநில மின்சார வாரியத்தில் கணக்கு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அப்போது அவர் ‘வசதி படைத்தோர்’ பட்டியலில் வருவ தால், அவருக்கு இதர பிற்படுத்தப் பட்டோர் சலுகை வழங்க முடியாது என்று கூறப்பட்டது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதி மன்றம், ‘அவரது வருமானம் மற்றும் அவரது பெற்றோரின் வருமா னத்தை கூட்டிப் பார்க்கும் போது, அவர் ‘கிரீமி லேயர்’ பட்டியலில் வருகிறார். எனவே, அவருக்கு இட ஒதுக்கீடு வழங் காதது சரி’ என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், அருண் மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பு விவரம்: இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வசதி படைத் தோரை விலக்கி வைப்பது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறையின் 93-ம் ஆண்டு சுற்றறிக்கையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒருவர் வசதி படைத்தோர் பட்டி யலில் வருகிறாரா, இல்லையா என்பதை முடிவு செய்ய அவரது தனிப்பட்ட வருமானத்தை கணக்கில் கொள்ள தேவை யில்லை. அவரது பெற்றோர் வருமானம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த வழக்கில் தனிநபர் மற்றும் அவரது பெற்றோரின் வரு மானத்தை கூட்டிப் பார்த்து அவர் வசதி படைத்தோர் பட்டி யலில் வருகிறார் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறானது. அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago