சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து பவானி சிங்கை நீக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேமுதிக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியி ருப்பதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டு வாதாடி வருகிறார்.
இந்த வழக்கில் விசா ரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
தண்டனையை ரத்து செய்யவும், ஜாமீன் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது ஆஜரான பவானிசிங் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதிலிருந்து அவர் தண்டனை பெற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து கொண்டதாகத் தெரி கிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள மேல் முறையீட்டு வழக்கில் அவர் ஆஜரானால் நீதி கிடைக்காது என்பதால், அவரை சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்கக் கோரி கர்நாடக தலைமைச் செயலரிடம் கடந்த 10-ம் தேதி மனு அளித்தோம். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, அவரை சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், தமிழகத்தில் இருந்து வழக்கை கர்நாடக த்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வழக்கு நியாயமான முறை யில் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதே போன்று, தற்போது பவானி சிங்கை மாற்ற உத்தரவிட வேண்டும். அவருக்கு பதிலாக குற்றவியல் வழக்குகளில் அனுபவம் மிக்க மூத்த வழக்கறிஞர் ஒருவரை அரசு வழக்கறிஞராக நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago