புவி வெப்பமடைதலின் விளைவே அதி தீவிரப் புயல்கள்: கிரீன்பீஸ்
இது குறித்து 'கிரீன்பீஸ் இந்தியா'வின் உறுப்பினர் பிஸ்வஜித் மொஹான்டி கூறுகையில், "பைலின் போன்ற அதி தீவிரப் புயல்கள் எதிர்காலத்தில் அவ்வப்போது பேரிடர்களை ஏற்படுத்துவதற்கு புவி வெப்பமடைதலின் தாக்கம் மிகுதாவதன் விளைவே ஆகும். சாதாரண புயல்கள்கூட மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து வரக்கூடும்" என்றார்.
கடந்த 1999-ல் ஒடிசாவைத் தாக்கியப் புயலுக்குப் பிறகு, 14 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவை பெரும் பாதிப்புக்குள்ளாக்கக் கூடியதாகவே பைலின் புயலின் வீச்சு காணப்படுவதாக கிரீன்பீஸ் இந்தியா அமைப்பு கூறியுள்ளது.
மேலும், " உலக நாடுகளின் அரசுகள் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தை முழுமையாக ஏற்று, புவியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்" என்று வலியுறுத்தினார் பிஸ்வஜித் மொஹான்டி.