ஆதார் குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தவறானவை: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 95.1% மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டது என்றும் 115.5 கோடி பேர் ஆதாரில் பதிவு செய்துள்ளார்கள் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த புள்ளிவிவரங்கள் ஊதிப்பெருக்கப்பட்ட புள்ளிவிவரங்களே என்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இறந்தவர்களையும் இதில் சேர்த்துள்ளனர் என்று இந்தப் புதிய மனு கோருகிறது.

முன்னாள் என்சிபிசிஆர் தலைவர் ஷாந்தா சின்ஹா, மகசேசே விருது வென்ற சமூக ஆர்வலர் கல்யாணி சென் ஆகியோர் மத்திய அரசு ஆதார் அட்டைப் பயன்கள் குறித்து கூறியது அனைத்தும் ஊதிப்பெருக்கப்பட்டவையே என்று மனு செய்துள்ளனர்.

அதே போல் சமூகநலத் திட்டங்களின் பயன்களை அடைய ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைகளையும் இவர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.

மனுதாரர்களை பிரதிநிதித்துவம் செய்த வழக்கறிஞர் விபின் நாயர், கூறும்போது மத்திய அரசும், இந்திய தனித்த அடையாள ஆணையமும் ஆதார் ஏற்புடைமையை குழப்ப முயற்சி செய்கின்றனர் என்றார்.

மேலும் மனுவில், அரசு கூறும் சதவீதம் மற்றும் எண்ணிக்கை இறந்து போனவர்களையும் உள்ளடக்கியுள்ளது என்றார்.

இந்த மனு மேலும், டிசம்பர் 28, 2016-ல் பெற்ற ஆர்டிஐ தகவலை சுட்டிக்காட்டி, ஆதார் வைத்திருக்கும் 99.9% நபர்கள் தங்களிடம் ஏற்கெனவே இருந்த 2 அடையாள அட்டைகளின் அடிப்படையிலேயே ஆதார் எண் பெற்றுள்ளனர் என்று அரசே கூறியுள்ளது. 2016 வரை 105.1 கோடி மக்கள் ஆதார் எண்ணுக்காக பதிவு செய்துள்ளனர் என்றும், ஆனால் இதில் 8,47,366 பேர் அல்லது 0.08% தான் அறிமுக நடைமுறைகளின் படி ஆதார் பெற்றுள்ளனர் என்றும் அரசே கூறுகிறது. எனவே ஆதார் அட்டை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் ஒரு நடைமுறை என்று அரசு கோருவது எப்படி சாத்தியம் அல்லது இந்தக் கோரல் தவறானதல்லவா? என்று கேட்டுள்ளனர் இந்த மனுதாரர்கள்.

நேரடிப் பயன் மாற்றுத் திட்டத்தில் சந்தேகம் (Direct Benefit Transfer-DBT):

நேரடியாகப் பயன்கள் சென்றடையும் திட்டத்தின் மூலம் 2014-15 மற்றும் 2015-16-ல் ரூ.49,560 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கோருகிறது. இது ‘தவறானது மற்றும் பெரிய அளவில் ஊதிப்பெருக்கப்பட்ட எண்களாகும்’ என்கிறது இந்த மனு.

இப்படியாக அரசு வெளியிடும் ஒவ்வொரு புள்ளிவிவரமும் பிரச்சினைக்குரியதாக உள்ளது எப்படி கணக்கிடப்படுகிறது என்ற முறைமை வெளியிடப்படுவதில்லை.

அரசு கோரும் ரூ.49,560 கோடி சேமிப்பு என்பதில் சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தின் மூலம் சேமிக்கப்பட்ட தொகை ரூ.26,408 கோடி, இந்த ரூ.26,408 கோடியும் 2014-15-ல் ரூ.14,672 கோடி, 2015-16-ல் ரூ.6,912 கோடி, 2016-17-ல் ரூ.4,824 கோடி ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஆனால் ஏப்ரல் - டிசம்பர் 2015 காலக்கட்டத்திற்கான சமையல் எரிவாயு நேரடி மானிய செலுத்தும் திட்டத்தின் மூலம் சேமிக்கப்பட்ட தொகை மீதான சிஏஜி தணிக்கையில் கூறப்பட்டது என்னவெனில் 92% சேமிப்பு சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சரிவினால் உருவான சேமிப்பே. 8% மட்டுமே அதாவது ரூ.1,764 கோடி மட்டுமே ஆதார் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு முயற்சிகளால் சேமிக்கப்பட்ட தொகையாகும் என்கிறது.

மேலும் வங்கிகளில் நேரடியாக அரசே சமையல் எரிவாயு மானியத்தைச் செலுத்தும் திட்டம் வருவதற்கு முன்பாக செயலில் உள்ள இணைப்பாகக் கூறி சட்டவிரோதமாக சமையல் எரிவாயு பெற்ற இணைப்புகளின் எண்ணிக்கை 3.34 கோடி என்று அரசு காட்டும் எண்ணிக்கையும் சரியானதல்ல என்று சிஏஜி தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 2016-17 வரை 2.33 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரூ.14,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்று அரசு கோருவது பற்றியும் இந்த மனு சவாலான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் ரத்து செய்யப்பட்ட மொத்த ரேஷன் கார்டுகளில் மிகச்சிறிதளவே ஆதார் அட்டைத் திட்டம் பங்களிப்புச் செய்துள்ளது என்று மத்திய அரசே கூறியுள்ளது என்று இந்த மனு ஐயம் எழுப்பியுள்ளது.

எனவே, “அரசு தரப்பினர் ஆதாரினால் இவ்வளவு சேமிக்கப்பட்டது என்று அரசு காட்டும் தொகையை அவர்கள் எப்படி வந்தடைந்தார்கள் என்பதற்கான முறை என்னவென்று வெளியிடப்படவில்லை. அல்லது தங்கள் முறையில் எந்தத் தரவுகளின் அடிப்படையில் இது தெரிவிக்கப்படுகிறது என்ற விவரமும் இல்லை, ஆகவே ஆதாரினால் மக்கள்பிரிவினர் சிலர் ஒதுக்கப்படுவதும் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதுமே நடந்துள்ளது” என்று மனுதாரர்கள் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

ஜூன் 27-ம் தேதி இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்