ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடுவர் ரவூப்பை தேடப்பட்டுவருபவர் என குற்றப்பத்திரிகையில் சேர்க்க மும்பை போலீஸ் திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்புடைய விண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
கிரிக்கெட் பிரியர்களாலும் பல்வேறு தரப்பினராலும் பரபரப்பாக பேசப்பட்ட சர்ச்சைக்குரிய ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் போட்டி நடுவர் அசாத் ரவூப் மீதான மும்பை போலீஸின் பிடி இறுகி வருகிறது.
இந்த வழக்கில் ரவூப் போலீஸாரால் தேடப்பட்டு வருபவர் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட உள்ளது.
அடுத்த வாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், மும்பை திரையுலக நட்சத்திரம் விண்டு தாரா சிங், மற்றும் 19 சூதாட்ட தரகர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. விண்டு போலீஸிடம் சிக்கி பின்னர் இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற போதிலும் அவர் கைதானபோதே ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் ரவூப் பெயரும் அடிபட ஆரம்பித்தது. விண்டுவும் மெய்ப்பனும் மே மாதத்தில் கைது செய்யப்பட்டு ஜூனில் ஜாமீனில் வெளியில் வந்தனர்.
ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் ரவூப் மீது குற்றம் சுமத்த போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் போலீஸார் அதற்கு ஆதாரமாக அவர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவுகள் தம்மிடம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெற்ற பருவத்தில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே விண்டுவின் தொலைபேசி தொடர்புகளை கண்காணித்து வந்ததாக இந்த வழக்கை விசாரிக்கும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரலில் தொலைபேசியை இடைமறித்து கேட்டபோது பாகிஸ்தான் நடுவர் ரவூப், விண்டுவிடம் தனக்கு பிறந்த நாள் வரப்போவதாக கூறியது கேட்டுள்ளது.
அப்போது விண்டு, உங்களுக்கு விரைவில் பிறந்தநாள் பரிசு வந்து சேரும் என கூறியுள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வழக்கில் தேடப்படும் மற்றொரு தரகரான பவான் ஜெயப்பூர் என்பவருடனும் விண்டு தொடர்பு கொண்டு ரவூப் பிறந்த நாள் பரிசு விவகாரம் பற்றி பேசியுள்ளார்.
தனக்கு கொடுக்கப்படவுள்ள தங்கச் சங்கிலிக்காக ரசீது தரும்படி விண்டுவிடம் ரவூப் கோரியுள்ளார். இந்த ரசீது கிடைத்தால் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளை தன்னால் சமாளிக்க முடியும் என்றும் விண்டுவிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஸ்பாட் பிக்ஸிங் புகார் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளதை தான் கைதாவதற்கு ஒரு நாள் முன்பாக ரவூப்பிடம் விண்டு எச்சரிக்கை செய்திடவே, ரவூப் இந்தியாவை விட்டு உடனடியாக தப்பினார். அதன்பிறகு அவருக்கு பிறந்த நாள் பரிசோ, ரசீதோ கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
எனினும், ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ரவூபுக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க தொலைபேசி உரையாடல் பதிவுகளை முன்வைக்க முடியும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விண்டு, ரவூப் இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல், மற்றும் விண்டு, பவான் இடையேயான தொலைபேசி உரையாடல்கள் பதிவாகியுள்ளன.
தனக்கு வரவேண்டிய அன்பளிப்புகளை வேறோரு தரகரான பிரேம் தனேஜாவிடம் இருந்து தில்லியில் ரவூப் பெற்றுக் கொள்ளலாம் என விண்டுவிடம் பவான் கூறி
யிருக்கிறார். இந்த அன்பளிப்புகளுக்கான விலைப்பட்டியலை கைப்பற்றியுள்ளோம். இவற்றையெல்லாம் ரவூப் மீதான புகாருக்கு ஆதாரமான ஆவணங்கள் என்று மும்பை குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
கிரிக்கெட் அணியின் ஆட்ட தந்திரங்கள் தொடர்பான ரகசியங்களை விண்டுவுக்கு ரவூப் தெரிவித்தார் என மும்பை போலீஸார் கூறுகின்றனர்.
தமக்கு வந்த இந்த தகவலை அடுத்த கட்டமாக மெய்யப்பன், பவான், உள்ளிட்ட தரகர்களுக்கு விண்டு தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், அணியை தேர்வு செய்து அதன் மீது பந்தயம் கட்டுவார்கள். ஐபிஎல் சீசன் 6ன்- போது பல கோடி ரூபாய் மதிப்புக்கு பந்தயம் கட்டிய மெய்யப்பனுக்கு சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளது. மெய்யப்பன் மீதான புகாருக்கு திட்டவட்டமான ஆதாரங்கள் உள்ளன என்கின்றனர் போலீஸார்.
ஐபிஎல் சீசன் 6-ன் போது பந்தயமாக எவ்வளவு தொகை கட்டலாம் என்றெல்லாம் விண்டுவும் மெய்யப்பனும் பல முறை தொலைபேசியில் பேசியுள்ளனர்.
தொலைபேசி உரையாடல் பதிவு தவிர, இரு சாட்சிகள் தரப்பு புகார்களையும் பதிவு செய்துவைத்துள்ளோம்.
பந்தயம் கட்டும் மெய்யப்பன், அணியின் ஆட்ட தந்திர ரகசியங்களை விண்டுவுக்கு தெரிவித்து வந்தார் என சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில் இரு சாட்சிகளின் வாக்குமூலம் அமைந்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் சூதாட்டச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்துள்ளனர் மும்பை போலீஸார்.
இவர்களை ஜாமீனில் விடுவித்த மெட்ரோபாலிடன் நீதிமன்றம், ஏமாற்றப்பட்டவர் யார் என்றோ, எந்தெந்த ஆவணங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்குப் பின்னர் பல்வேறு கிரிக்கெட் பிரியர்கள், மும்பை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்தபிறகு குறிப்பாக மே 15ம் தேதி ஆட்டத்தை பார்த்ததும் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறி புகார் செய்தனர்.
ஸ்பாட் பிக்ஸிங் தரகர்களில் ஒருவரான ரமேஷ் வியாஸ் என்பவரிடம் இருந்து மட்டும் 92 கைபேசிகளை நாங்கள் கைப்பற்றினோம். இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த தரகர்களுக்கு பாலமாக இருந்தவர் அவர். இந்த கைபேசிகளில் ஒன்றைத்தவிர மற்ற அனைத்துக்கும் போலி ஆவணங்கள் கொடுத்தே சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளன. இதே தந்திரங்களையே மற்ற தரகர்களும் பின்பற்றியுள்ளனர். எனவே மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்த உள்ளோம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சூதாட்ட தரகர்களுக்கும் விண்டுவுக்கும் இடையே மும்பையின் பல்வேறு ஹோட்டல்களில் நடந்த சந்திப்புக்கு ஆதரமாக அந்த ஹோட்டல்களின் ரகசிய கேமராக்களில் பதிவான படங்களும் கிடைத்துள்ளன என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago