லிபியாவில் கடத்தப்பட்டு 17 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார் ஆந்திர மருத்துவர்

By என்.மகேஷ் குமார்

லிபியாவில் ஐஎஸ் தீவிரவாதி களால் கடத்தப்பட்ட ஆந்திர மருத்துவர் ஒருவர், மத்திய அரசின் முயற்சியால் 17 மாதங்களுக்குப் பிறகு தோட்டா காயங்களுடன் தனது சொந்த ஊர் திரும்பி உள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா வைச் சேர்ந்தவர் டாக்டர் ராம மூர்த்தி. இவர் கடந்த 1999-ம் ஆண்டு லிபியாவில் உள்ள சினா மருத்துவ மனையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு பவானி என்ற மனைவி யும் பிள்ளைகளும் விஜயவாடா வில் வசித்து வருகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு, செப்டம்பர் 8-ம் தேதி அந்த மருத்துவமனைக்குள் திடீ ரென புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள், டாக்டர் ராமமூர்த்தி, டாக்டர் சமல் பிரவாஸ் ரஞ்சன் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 7 செவிலியர்களைக் கடத்திச் சென் றனர். லிபியாவில் நடைபெற்று வரும் போரில் காயமடையும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையடுத்து, டாக்டர் ராம மூர்த்தியை உடனடியாக விடு விக்கக் கோரி அவரது குடும்பத் தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராமமூர்த்தியை விடுவிக்க நட வடிக்கை எடுத்தார். அதன்பேரில், 17 மாதங்களுக்குப் பிறகு தீவிர வாதிகளின் பிடியிலிருந்து கடந்த 22-ம் தேதி ராமமூர்த்தி விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று முன் தினம் விஜயவாடா விமான நிலையம் வந்தடைந்த டாக்டர் ராம மூர்த்தியை அவரது குடும்பத் தினர், உறவினர், நண்பர்கள் உள் ளிட்டோர் கண்ணீர் மல்க வர வேற்றனர். பின்னர் அவர் விஜய வாடாவில் உள்ள அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர் ராமமூர்த்திக்கு கால், மணிக்கட்டு ஆகிய இடங்களில் தோட்டா காயங்கள் உள்ளதால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 மாதங் கள் வரை ஓய்வெடுத்தால்தான் அவர் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் ராமமூர்த்தி செய்தி யாளர்களிடம் கூறும்போது, “நான் உயிருடன் மீண்டும் தாயகம் திரும்புவேன் என கனவிலும் நினைக்கவில்லை. இதற்காக நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு மிக்க நன்றி. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் பெரும்பாலான வர்கள் இளைஞர்கள்” என்றார்.

டாக்டர் ராமமூர்த்தி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்