புதுச்சேரியில் உள்ள ராமன் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் மாநில கமிட்டி தலைவராக டாக்டர்ரங்கராஜனும், மாநிலச் செயலராக ரவி சீனிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. ஆத் ஆத்மி தொடர்பான நூல், ரூ. 10 மதிப்பிலான தொப்பி ஆகியவை அதிகளவில் விற்பனையாகின. கட்சிக்கு நன்கொடையும் பெறப்பட்டது.
நேரடிச் சேர்க்கை முதல் முறை நடத்தப்பட்டாலும், ஏற்கெனவே இணையத்தின் வழியாக பலரும் கட்சியில் புதுச்சேரியில் இணைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
டுவிட்டர் வழக்கு
மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சீனிவாசன் டுவிட்டர் மூலம் பலருக்கும் தெரிந்தவர். கடந்த 2012-ல் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்தது தொடர்பாக இவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. தற்போது இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது.
செயலர் ரவி சீனிவாசன் கூறுகையில், "உறுப்பினர் சேர்க்கையை தொகுதி வாரியாகவும், வீடுவீடாகவும் சென்று நடத்த உள்ளோம். புதுச்சேரியின் முக்கியப் பிரச்சினைகள், அதன் தீர்வுகள் தொடர்பாக மனு தயாரித்து முதல்வரிடம் அளிக்க உள்ளோம். பல்வேறுகட்சிகள் தரப்பிலிருந்தும் சேர ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக அரசு அலுவலர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஆர்வமுடன் விசாரித்தனர்" என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago