பெட்ரோல் லிட்டருக்கு 65 பைசா குறைப்பு: இன்று டீசல் விலையும் குறைகிறது

By பிடிஐ

பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 65 பைசா குறைக் கப்பட்டது. இதன்படி சென்னை யில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.70.87 ஆக குறைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிறகு டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி இன்று மாலை நாடு திரும்புகிறார். முன்னதாக நேற்று நள்ளிரவு முதலே டீசல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக டீசல் விலை குறைக்கப்பட இருப்பதால், பிரதமர் நாடு திரும்பிய பிறகு அந்த அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் குறையும் என்று தெரிகிறது.

டீசலுக்கு கொடுக்கப்படும் மானியத்தை குறைப்பதற்காக 2013 ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் 19 முறை டீசல் விலை உயர்த் தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் விலை 15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலும் விலை ஏற்றமாகவே இருக்கிறது. சமீபத்தில் சற்று குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்