குற்றவாளியே விசாரணைக்கு உத்தரவிடுவதா?

By செய்திப்பிரிவு

பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளமான டுவிட்டரில் அவர் கூறியிருப்பது:

இளம்பெண்ணை வேவு பார்க்க உத்தரவிட்டது உள்துறை. இப்போது மோடி வசம்தான் உள்துறை அமைச்சகம் உள்ளது. குற்றவாளியே விசாரணைக்கு உத்தரவிடுவதுபோல் வேவு பார்ப்பு விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மோடி வாய் திறந்து பேசுவாரா? சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் அவரைக் காப்பாற்ற அருண் ஜேட்லி முயற்சிக்கிறார். இந்திய டெலிகிராப் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மோடி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மோடியின் பாணியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் செயல்படுகிறார். கெஜ்ரிவாலுக்கு எதிராக புகார் கூறினால் அவரே நீதிபதியை தேர்வு செய்து விசாரணையை நடத்துகிறார். இதுவும் வேடிக்கையாக உள்ளது என்று திக்விஜய் சிங் டுவிட்டரில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

மேலும்