கொள்ளையனிடம் இருந்து தனது தாயை காப்பாற்றிய திஷாந்த் மெஹன்திரட்டா என்ற 13 சிறுவன், 2015-ம் ஆண்டுக்கான தேசிய தீரச் செயல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம், பாஞ்ச் குளா நகரில் 8-ம் வகுப்பு படித்து வரும் இச்சிறுவனை, இந்திய குழந்தை நல்வாழ்வு கவுன்சில் இந்த விருதுக்கு தேர்வு செய் துள்ளது.
கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மதிய வேளையில் திஷாந்த், அவனது தம்பி ரயான் (8), தாய் அர்ச்சனா (42) ஆகிய மூவர் மட்டும் வீட்டில் இருந்தனர். திஷாந்தின் தந்தை ரவீந்தர் வெளியில் சென்றார்.
இந்நிலையில் ரவீந்தரை பார்க்க வேண்டும் என்று வீட்டுக்கு வந்த மர்ம நபர், திடீரென அர்ச்சனா வின் கழுத்தில் கத்தியை வைத்து, பணம், நகைகளை கொண்டுவரும் படி குழந்தைகளை மிரட்டினார்.
தாயை விட்டுவிடும்படி ஒரு வினாடி கெஞ்சிய திஷாந்த், அடுத்த வினாடி மர்ம நபரின் கையில் இருந்த கத்தியை தட்டி விட்டார். இதையடுத்து தாயும் குழந்தைகளும் அந்த நபருடன் சண்டையிட்டனர். இதனிடையே இவர்களின் கூக்குரல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தேசிய தீரச் செயல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திஷாந் துக்கு வரும் 26-ம் தேதி குடியரசு தின விழாவில் பதக்கம், பரிசுத் தொகையை பிரதமர் நரேந்திர மோடி வழங்குவார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago