முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு களை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் சுப்பிர மணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவுக்கு எதிராக நான் தேர்தலில் பிரச்சாரம் செய்தேன். அதனால், என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு தொடர்ந்து வருகிறார்.
என் மீது சென்னை முதன்மை மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் மூன்று அவதூறு வழக்குகளை தொடர்ந் துள்ளார்.
உலக நாடுகளில் அவதூறு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இச்சட்டம் பேச்சுரிமையை ஒடுக்க, குறிப்பாக பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகை யில் இருப்பதால் இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் பிரிவு 21-ஐ ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய அமர்வு முன்பு நேற்று ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி ‘என் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளேன். அவ்வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கோரினார்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘உங்கள் மனுவை படித்துப் பார்த்தேன். அதை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உங்கள் மனு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று தெரி வித்தார். அப்போது சுப்பிர மணியன் சுவாமி, ‘அதற்குள் என் மீதான வழக்குகளில் இருந்து சம்மன் அனுப்பி விட்டால் என்ன செய்வது?’ என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘அப்படி ஏதாவது நடந்தால், எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று உறுதி அளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago