விலைவாசியை கட்டுப்படுத்த ரூ.5000 கோடி: நடிகர் பாலகிருஷ்ணா உறுதி

By என்.மகேஷ் குமார்

தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால், விலைவாசியைக் கட்டுப்படுத்த ரூ. 5000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என நடிகர் பாலகிருஷ்ணா கூறினார்.

தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பாலகிருஷ்ணா, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அப்போது போலாகி எனும் இடத்தில் பாலகிருஷ்ணா பேசியது: மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க தயாராகி விட்டனர். தெலுங்கு தேசம் கட்சியால் மட்டும்தான் தெலங்கானா, சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தெலுங்கு தேசம் கட்சியால்தான் முடியும். காங்கிரஸ் ஆட்சியில் கட்டுக்கடங்காமல் விலைவாசி உயர்ந்துவிட்டது.

தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால், விலைவாசியை கட்டுப்படுத்த ரூ. 5000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தெலுங்கு தேசம் அமல்படுத்தும். இவ்வாறு பாலகிருஷ்ணா பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்