கட்சிக்குள் பிளவு இல்லை: ஆம் ஆத்மி விளக்கம்

By செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சிக்குள் உட்பூசல் ஏதும் இல்லை என்றும் எம்.எல்.ஏ வினோத் குமார் பென்னியுடன் ஏற்பட்ட பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாகவும் அக்கக்ட்சி அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மியின் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து கட்சி எம்.எல்.ஏ வினோத்குமார் பின்னி வெளிநடப்பு செய்தார். தன்னை அமைச்சராக தேர்வு செய்யாததற்காக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அவர் தெரிவித்தார். மேலும், ‘நாளை பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி இது பற்றி விளக்கம் அளிப்பேன்.’ என நிருபர்களிடம் தெரிவித்துவிட்டு கோபத்துடன் புறப்பட்டார் எம்எல்ஏ. வினோத் குமார். அவர் வெளிநடப்பு செய்தது ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட முதல் பின்னடைவாக கருதப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளான சஞ்ஜய் சிங், குமார் விஷ்வாஸ் ஆகியோர் எம்.எல்.ஏ வினோத்குமார் பின்னியின் வீட்டுக்குச் சென்று அவரை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக , எம்.எல்.ஏ பின்னி வீட்டிற்கு அவர்கள் சென்றனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னி, கட்சிக்கும் எனக்கும் எந்த பிளவும் இல்லை என்றார்.

இதே போல், கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்ஜய் சிங், குமார் விஷ்வாஸ் பேசிய போது, ஆம் ஆத்மியில் உட்கட்சி பூசல் என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்