‘பிரதமர் பதவிக்கு மோடி’ பாஜகவின் தேர்தல் முழக்கம்

வரும் மக்களவைத் தேர்தலில், ‘பிரதமர் பதவிக்கு மோடி’ என்பது பா.ஜ.க.வின் தேர்தல் முழக்கமாக இருக்கும். மேலும் நாட்டின் தற்போதையை நிலையை, நெருக்கடி நிலைக்கு பிந்தைய காலத்துடன் ஒப்பிட்டு பிரசாரம் செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது.

பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் ஆட்சி மன்றக்குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் மக்களவை தேர்தலில் ‘பிரதமர் பதவிக்கு மோடி’ என்ற வாசகத்தை வெற்றி முழக்கமாக (ஸ்லோகன்) பயன்படுத்த இருக்கிறோம்.

இந்த பிரச்சாரம், நெருக்கடி நிலை காலத்தில் காங்கிரஸ் அரசை அகற்றுவதற்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் பயன்படுத்தியதை போன்றதாகும்.

1977ல் காங்கிரஸ் கட்சிக்கு நாட்டு மக்களிடம் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோன்ற நிலை தற்போதும் ஏற்பட்டுள்ளது. இதை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் நிதி திரட்டியது போல, வரும் மக்களவை தேர்தலுக்கு “ஒரு ஓட்டுக்கு, ஒரு நோட்டு” என நிதி திரட்டவுள்ளோம்.

இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.1000 வரை நிதி திரட்டப்படும். இதன் மூலம் கட்சிக்கு ஆதரவு தருவோர் எண்ணிக்கையும் கணக்கில் கொள்ளப்படும் என்றார் அனந்தகுமார்.

பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தவும், ஆம் ஆத்மி பாணியில் வாக்களர் களை வீடு தேடிச் சென்று சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை, சிறந்த ஆட்சியாளர் தினமாக கொண்டாட முடிவு செய்தோம்’’ என்றார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நரேந்திர மோடி, வெங்கையா நாயுடு உள்பட பலரும் பங்கேற்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர்களான சிவராஜ்சிங் சௌகான், ரமண்சிங், வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்