மின்சாரப் பங்கீடு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநிலப் பிரிவினை சட்டத்தை மீறு கிறார் என தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டி யுள்ளார்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங் களுக்கிடையிலான மின்சாரப் பங்கீடு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தெலங்கானா அரசுக்கு மின் விநியோகம் குறித்து தொலைநோக்குப் பார்வை இல்லை என சந்திரபாபு நாயுடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நேற்று கூறியதாவது:
எங்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லாவிட்டாலும், சந்திர பாபு நாயுடுவைப் போல துரோகம் செய்யும் எண்ணம் இல்லை. ஸ்ரீசைலம் மையத்திலிருந்து உற்பத் தியாகும் மின்சாரத்தைப் பங்கீடு செய்வது குறித்து உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
கிருஷ்ணபட்டினம் மின் உற்பத்தி மையம் இரு மாநிலங்களுக்கும் பொதுவானது. மாநிலப் பிரிவினை சட்டத்தின்படி, அனைத்து திட்டங்க ளிலும் தெலங்கானாவுக்கு 54 சதவீதம் பங்கு உள்ளது. ஆனால் தெலங்கானாவுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என மின் உற்பத்தி நிறுவனமான இந்துஜா குழுமத்தை சந்திரபாபு மிரட்டி உள்ளார். தெலங்கானா மக்கள் மீது சந்திரபாபு நாயுடுக்கு இவ்வளவு கோபம் ஏன்? என சந்திர சேகர ராவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago