மகாராஷ்டிராவில் வாக்குகள் பிரிவதால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவுவதால் தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பாஜக கருதுகிறது. அக்கட்சியின் சார்பில் குறிப்பிட்ட தொகுதிகளில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட 46 தொகுதிகளில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பின்படி எங்கள் கட்சிக்கு 28 முதல் 30 சதவீத வாக்குகள் பதிவாகும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸுக்கு 22%, சிவசேனா 17%, தேசியவாத காங்கிரஸுக்கு 15% மற்றும் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு வெறும் ஆறு சதவீத வாக்குகளும் கிடைக்கும். இதன்படி மொத்தம் உள்ள 288-ல் 155 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்.

ஒருவேளை ஆட்சி அமைப் பதற்கு போதுமான பெரும்பான்மை கிடைக்காவிட்டால், சிவசேனா வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்படும். இதை மனதில் வைத்துதான் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிவசேனாவை எதிர்த்து பாஜக தலைவர்கள் பேசவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 25 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுப்பினராக இருந்த சிவசேனா, தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினையால் உறவை முறித்துக்கொண்டது. அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட்டு அதன் உறுப்பினரான தேசியவாத காங்கிரஸும் வெளியேறியது. இதனால், மகாராஷ்டிராவில் இந்த முறை நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.

இதேபோல், கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், பிஹாரில் நான்குமுனைப் போட்டி ஏற்பட்டதால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்தன. இதுவே பாஜக அதிக இடங்களைப் பிடிக்க பெரும் உதவியாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே இப் போது நடைபெற உள்ள இரு மாநில சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என பாஜக நம்புகிறது.

ஹரியாணா சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறை யாக ஆளும் காங்கிரஸ், முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளம், பாஜக மற்றும் ஜன்ஹீத் காங்கிரஸ் என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்