செளமியா என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கேரள உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
கொச்சியில் வணிக வளாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் செளமியா (23). கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி இவர் வழக்கம்போல் இரவில் ரயிலேறி வீடு திரும்பும்போது, கோவிந்தசாமி என்பவர் இவரை நகர்ந்து சென்றுகொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே இழுத்து தள்ளியிருக்கிறார். படுகாயமடைந்த அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செளமியா 2011 பிப்ரவரி 6-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
கேரளாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய திருச்சூர் விரைவு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவருக்கு மரண தண்டனையை அறிவித்தது.
இந்த நிலையில், கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கேரள உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
முன்னதாக, தமிழ்நாட்டில் 2004 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் 8 வழக்குகளில் கோவிந்தசாமி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என்பது தொடர்பான ஆவணத்தையும் திருச்சூர் விரைவு நீதிமன்றம் தனது தீர்ப்பின்போது சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago