போலி என்கவுன்ட்டர்: கர்னல் உள்பட 6 பேர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை

ஜம்மு காஷ்மீரில் 2010-ல் நடந்த போலி என்கவுன்ட்டரில் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் மீது ராணுவ நீதி மன்றம் விசாரிக்க புதன்கிழமை உத்தரவிடப்பட்டது.

4-வது ராஜ்புத் படைப்பிரிவின் கமான்டிங் அதிகாரி கர்னல் டி.கே.பதானியா, மேஜர் உபேந்தர் மற்றும் 4 பேர் ராணுவ நீதிமன்ற விசார ணைக்கு உள்ளாகியுள்ளவர்கள்.

இந்த தகவலை வடக்குப்பகுதி ராணுவத் தலைமையக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். போலீ ஸார், நீதித்துறை ஒத்துழைப்புடன் விரிவாக விசாரணை நடத்தி குற்றம் இழைத்தவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராணுவ நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் செய்தித்தொடர்பாளர்.

சோபோர் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை வேலை வாங்கித் தருவதாக கூறி கடத்திச் சென்ற ராணுவத்தினர், குப்வாரா பகுதிக்கு அழைத்துச் சென்று மூவரையும் பயங்கரவாதிகள் எனக் கூறி கொன்றதாக குறிப்பிட்டு இந்த சம்பவம் தொடர்பாக கர்னல் பதானியா, மேஜர் உபேந்தர் மற்றும் இவர்கள் சார்ந்த ராணுவப்பிரிவின் 4 பேரை குற்றப் பத்திரிகையில் மாநில போலீஸார் சேர்த்தனர்.

போலி என்கவுன்ட்டர் தொடர்பாக கர்னல், மேஜர், இதர நபர்கள் 7 பேர் மீது 2010 ஜூலையில் மாநில போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சோபோரில் உள்ள தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

போலி என்கவுன்ட்டரில் தொடர்புடையவர்கள் என பிரதேச ராணுவ ஜவான் அப்பாஸ் ஷா, பஷாரத் லோன், அப்துல் ஹமீத் பட் ஆகியோரை மாநில போலீஸார் கைது செய்தனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் உள்ள மச்சில் பகுதியில் ஊடுருவிய 3 பேரை சுட்டுக் கொன்றதாக 2010ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி ராணுவம் தரப்பில் அறிவிக் கப்பட்டது. கொலையுண்டவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொல்லப்பட்ட வர்கள் முகம்மது ஷபி, ஷேஸத் அகமது, ரியாஸ் அகமது எனவும் இவர்கள் பாரமுல்லா மாவட்டம் உள்ளி நதிஹால் பகுதியைச் சேர்ந்த வர்கள் என்றும் தகவல் வெளியானது.

உயிரிழந்த 3 பேரின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் பிரதேச ராணுவப் பிரிவைச் சேர்ந்த ஜவான் மற்றும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, போலி என் கவுன்ட் டர் சம்பவம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, 2 மாதங் களாக நடந்த போராட்டத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர். -பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE