சுப்ரதா ராய்க்கு நிபந்தனை ஜாமீன்: ரூ.10,000 கோடியை டெபாசிட் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

முதலீட்டாளர்களிடம் இருந்து விதிமுறைகளை மீறி பணம் திரட்டிய வழக்கில், சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிக்க, சஹாரா நிறுவனம் ரூ.10,000 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தர வேண்டிய இந்தத் தொகையை செலுத்துவதற்காக, சஹாரா குழுமத்தின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதலீட்டாளர்களிடம் இருந்து விதிமுறைகளை மீறி பணம் திரட்டிய வழக்கில், சுப்ரதா ராய் மற்றும் சஹாரா குழுமத்தின் இரண்டு இயக்குனர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீனில் விடுவிக்க சஹாரா நிறுவனம் ரூ.10,000 கோடியை டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும் என்று நிபந்தணை விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தொகை டெபாசிட் செய்யப்பட்டவுன், சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்.

முன்னதாக, முதலீட்டாளர்களுக்கு ரூ.20,000 கோடியை திருப்பித் தராதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது. அதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்