ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஷம்ஷெர் ஹுசைன் கூறும்போது, “பூஞ்ச் மாவட்டம் சாஜியான் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடுக்கு அப்பால் இருந்து புதன்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோல், கிர்னி மற்றும் ஷாபுர் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும் இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்றார்.
ஜம்மு மண்டல ஆணையர் ஷாந்த் மனு கூறும்போது, “ஜம்மு மண்டலத்துக்குட்பட்ட சர்வதேச எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்படவில்லை. அதேநேரம், பூஞ்ச் பகுயில் உள்ள சாஜியான் பகுதியில் தாக்குதல் நடத்தப்படுகிறது” என்றார்.
கடந்த 1-ம் தேதி முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 8 பேர் பலியாயினர். 13 பாதுகாப்புப் படையினர் உட்பட 94 பேர் காயமடைந்தனர். இதுதவிர எல்லையோரம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago