மது போதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை: ஆந்திர முதல்வர் எச்சரிக்கை

மது போதையில் வாகனம் ஓட்டு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குண்டூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது நத்தனபல்லி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

முந்தைய காங்கிரஸ் ஆட்சி யின்போது பாதுகாப்பு விதிமுறை களை பின்பற்றாமல் பல சாலை கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் 20 சதவீத சாலை விபத்துகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இனி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்துகளை தடுக்க 2-வது சனிக்கிழமைகளில் போக்குவரத்து, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் முறை அமல் படுத்தப்படும். மேலும் மருத்துவர் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சபாநாயகர் கோடல சிவப்பிரசாத், தனது மாவட்டத்தில் கழிப்பறைகள் கட்டித்தர முழு மூச்சுடன் செயல்பட்டார். இதன் காரணமாக 100 சதவீதம் கழிப்பறை உள்ள மாவட்டமாக உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஆரோக்ய ரக்‌ஷா என்ற திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி, சபாநாயகர் கோடல சிவப்பிரசாத், மாநில அமைச்சர் கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்