9 நாட்களுக்குப் பிறகு எல்லையில் ஜம்மு, சம்பா பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் சற்று தணிந்துள்ளது. ஆனால் கத்துவா பகுதியில் மட்டும் 20 நிமிடங்களுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1-ம் தேதியிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.
இதில் மொத்தம் 8 இந்தியர்கள் உயிரிழந்தனர். எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்களை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு எல்லையில் ஜம்மு, சம்பா பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் சற்று தணிந்துள்ளது.
இது குறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வியாழக்கிழமை இரவு ஜம்மு, சம்பா பகுதிகளில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் தாக்குதல் நடத்தப்படவில்லை. ஆனால் கத்துவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் மட்டும் 11 மணியிலிருந்து 11.2ஒ வரை 20 நிமிடங்களுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றார்.
பாகிஸ்தான் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி: "பழைய நினைவில் நமது எதிரிகள் சண்டை நிறுத்தத்தை மீறி வருகின்றனர். ஆனால் காலம் மாறிவிட்டது. இனிமேல் தவறுகளை சகித்துக்கொள்ள மாட்டோம். அவர்களுக்கு அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுக்கப்படும். நமது வீரர்கள் வார்த்தைகளால் பேச மாட்டார்கள். துப்பாக்கியால் பேசுவார்கள். சண்டை நிறுத்தம் மீறப்படும் போதெல்லாம் அவர்கள் துப்பாக்கியால் பதில் அளிப்பார்கள்" என கூறியிருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago