வரதட்சிணை புகாரை கவனமாக கையாளுங்கள்: மத்திய உள்துறை அறிவுறுத்தல்

By பிடிஐ

வரதட்சிணை தொடர்பான புகார்களை கவனமாகக் கையாளும்படி காவல் துறைக்கு மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

திருமணம் சார்ந்த வழக்குகளில், ஐபிசி 498-ஏ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்போது, குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாகக் கைது செய்யக் கூடாது. சிஆர்பிசி 41-வது பிரிவின் கீழ் (கைது ஆணை இன்றி கைது செய்யமுடியும்) வழக்கு பதியப்பட்டாலும் தேவையிருக்கிறது என காவல் துறை திருப்தியடையும்பட்சத்தில் மட்டுமே கைது நடவடிக்கை இருக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஐபிசி 498-ஏ பிரிவின் கீழ் பெண்ணின் கணவர் அல்லது அப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய அவரது உறவினர் களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.

“அண்மைக் காலங்களில் குடும்ப நல வழக்குகள் அதிகரித்து விட்டன. ஐபிடி 498-ஏ பிரிவின் கீழ் பிணையில் வரமுடியாத வகையில் வழக்குத் தொடரப்படுகிறது. இச்சட்டப்பிரிவை, சில பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்குப் பதிலாக, தவறான முறையில் பழிவாங்கும் ஆயுதமாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது” என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித் திருந்தது.

இதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் மேற்கண்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு அவ்வப்போது அளித்து வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி யூனியன் பிரதேசம் மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது. அனைத்து காவல்துறை அதிகாரிகளும், வழக்கு தொடர்பான அனைத்துக் காரண காரியங்கள், தடயங்கள், சாட்சிகளை ஆராய்ந்து கைது செய்ய போதிய முகாந்திரம் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை நீதிபதியின் முன் நிறுத்தி தடுப்புக் காவலில் வைப்பதற்கு முன் ஆதாரங் களை சரிபார்க்க வேண்டும் என மாநில அரசுகள் காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்