ஓய்வுக்குப் பிறகு நீதிபதிகளுக்கு அரசு பதவி தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

By எம்.சண்முகம்

ஓய்வுபெற்ற பின் நீதிபதிகளுக்கு அரசு பதவி வழங்க, குறிப்பிட்ட கால அளவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முகமது அலி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டி ருந்ததாவது:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் அப்பதவியைவிட குறைந்த மதிப்பு ள்ள கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரைவிட குறைந்த தகுதியுடைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மூலம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். இச்செயல் நீதித்துறையின் மாண்பை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின் அரசு பதவிகளை ஏற்க, தடை விதிக்க வேண்டும். தற்போது நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின் அரசு பதவிகளை ஏற்கும் நடைமுறைக்கு அரசியல் சாசனத்தில் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், நீதிபதிகள் அரசு பதவிகளில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால், அதற்கு எந்தத் தடையும் விதிக்கப் படவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். நீதித் துறையின் மாண்பை காக்க இத்தகைய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்தே, ஏ.எம்.சாப்ரே அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கள் உத்தரவு பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் ஓய்வுபெற்ற பின்பு கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, அப்பொறுப்பை ஏற்றார். இதை யடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசு பதவிகளை ஏற்பது குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, கடந்த மாதம் ஓய்வுபெற்ற ஆர்.எம்.லோதா, ‘நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்பு அரசு பதவிகளை ஏற்க குறிப்பிட்ட காலம் தடை விதிக்க வேண்டும்’ என்று கருத்தை தெரிவித் திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்