ஊழல் எதிர்ப்பு மசோதாக்கள் நிறைவேற நடவடிக்கை

By செய்திப்பிரிவு

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக பிப்ரவரி 5 முதல் 21-ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இக்கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக போராடுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் மசோதா, ஊழல் தடுப்புச் சட்டத்திருத்த மசோதா, குடிமக்கள் உரிமை சாசனச் சட்டம், வெளிநாட்டு பொது ஊழியர்கள் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இது தொடர்பாக வி.நாராயணசாமி புது டெல்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த அமைப்புக் கான விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளோம். லோக்பாலின் தலைவர், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளை தொடங்கியிருக்கிறோம்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான மசோதாக்களை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்