நீதிபதி கர்ணனை நேரில் ஆஜர்படுத்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அவரிடம் நேற்று நேரில் வழங்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக தனது பிடிவாதத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இரண்டு முறை வாய்ப்பளித்தும் நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகா ததால், அவரை வரும் 31-ம் தேதி நேரில் ஆஜர்படுத்தும்படி மேற்குவங்க போலீஸ் டிஜிபி-க்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ஏற்க மறுத்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் மீதும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டார். சமூக அந்தஸ்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்கும், மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தியதற்காகவும் ரூ.14 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவரது வீட்டில் இருந்தபடியே உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை நிறை வேற்றும் வகையில் மேற்குவங்க மாநில போலீஸ் டிஜிபி சுராஜித் கர் புராகாயஸ்தா, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், டிஐஜி(சிஐடி) ராஜேஷ் குமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் கொல்கத்தா நியூ டவுனில் உள்ள நீதிபதி கர்ணனின் இல்லத்துக்கு நேற்று நேரில் சென்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை போலீஸ் அதிகாரிகள் நீதிபதி கர்ணனிடம் ஒப்படைத்தனர். அந்த உத்தரவை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன், அதிலேயே ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். ‘எனது மரியாதையையும் அந்தஸ் தையும் குறைக்கும் வகையில், நீதிபதிகளாகிய நீங்கள் பிறப்பித் துள்ள இந்த உத்தரவு வன் கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு களின்படி கூறப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. ஒரு தலித் நீதிபதிக்கு தர்மசங்கடத்தை ஏற் படுத்தும் செயல். எனவே, நீதித் துறையின் மாண்பை காப்பாற்ற இனிமேலாவது இதுபோன்ற துன் புறுத்தல்களை நிறுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று எழுதினார். இதை தனது உத்தரவாக கருதும்படி போலீஸாரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அதை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி யளித்த நீதிபதிகள் கர்ணன், ‘எனக்கு வாரன்ட் பிறப்பித்ததன் மூலம், உலகம் முழுவதும் நகைப்புக்குரிய அமைப்பாக உச்ச நீதிமன்றம் மாறியுள்ளது. நீதித்துறையில் ஊழல் நிறைந்துவிட்டது என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
உங்கள் மீது இன்னும் கடுமை யான நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, ‘எனது சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருகிறேன்’ என்று பதிலளித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வரும் 31-ம் தேதி நேரில் ஆஜராவீர்களா? என்ற கேள்விக்கு, ‘நான் எதற்காக ஆஜராக வேண்டும். அந்த உத்தரவே தவறானது. சட்ட விரோதமானது’ என்றார். நீங்கள் இதுபோன்று உத்தரவு பிறப்பிக்க முடியுமா? என்ற கேள்விக்கு, ‘நான் இப்போதும் உயர் நீதிமன்ற நீதிபதிதான். நான் எங்கு உட்கார்ந்து உத்தரவு பிறப்பிக்கிறேனோ அந்த இடம்தான் நீதிமன்றம்’ என்று பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago