டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி: காங்., பாஜகவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.

ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோத்தா தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும், டெல்லி சட்டப்பேரவை ஓராண்டுக்கு முடக்கிவைக்கப்படுவது ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தமது கவலையைத் தெரிவித்தது.

முன்னதாக, டெல்லி சட்டப்பேரவையில், ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அதனால், ஆம் ஆத்மியின் 49 நாட்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வழிவகை செய்யுமாறு துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங்குக்கு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால், துணை நிலை ஆளுநர் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனையடுத்து, அங்கு சட்டப்பேரவை முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

அதன்பின்னர், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆம் ஆத்மி கட்சி, அங்கு சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி புதிதாக டெல்லி சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தக் கோரியது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக மத்திய அரசு தனது தரப்பு விளக்கத்தை அளித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்