மே.வங்கத்தில் அதிர்ச்சி: 3 சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு

By ஏஎன்ஐ

பெண்களுக்கு எதிரான மற்றொரு அதிர்ச்சிகர குற்றச் சம்பவமாக, மேற்கு வங்கத்தின் பன்குரா மாவட்டத்தில் 3 சிறுமிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது.

பன்குரா நகரில் நேற்று (ஞாயிறு) மாலை இச்சிறுமிகள் மூவரும் டியூஷன் வகுப்பு முடிந்து, பேருந்தில் வீட்டுக்கு புறப்பட்டனர். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கும்போது, இவர்கள் மீது மர்ம நபர் ஆசிட் வீசினார்.

இதில் அலறித் துடித்த சிறுமிகள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் கூறும்போது, “டியூஷன் வகுப்புக்கு சென்றுவிட்டு, பேருந்தில் இருந்து நாங்கள் இறங்கும்போது இந்த சம்பவம் நடந்தது. என்னால் யாரையும் சந்தேகிக்க முடியவில்லை. ஆனால் இவ்வாறு செய்தவர்களை தூக்கில் போடவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது” என்றார்.

சிறுமிகள் மீது ஆசிட் வீசியவர் யார் என்பது தொடர்பாக இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜாய்பூர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்