ஆந்திராவில் நடிகை ரோஜா கைது

By என்.மகேஷ் குமார்

விஜயவாடாவில் நடைபெற்று வரும் தேசிய பெண்கள் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சென்ற நடிகையும், எம்எல்ஏவுமான ரோஜாவை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் தேசிய பெண்கள் நாடாளுமன்ற மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற் பதற்காக நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நேற்று ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா சென்றார்.

விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும், அங்கு காத்திருந்த போலீஸார் ரோஜாவை கைது செய்தனர். இதனால் ரோஜாவிற்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து விஜயவாடாவில் டிஜிபி சாம்பசிவ ராவ் கூறியதாவது: தேசிய பெண்கள் நாடாளுமன்ற மாநாட்டில் ரோஜா பிரச்சினை ஏற்படுத்த திட்டமிட்டதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையிலேயே அவரை கைது செய்தோம். மாநாட்டில் அவர் கலந்து கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பிரச்சினையில் ஈடுபட மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும்படி கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். எனவே தான் அவரை கைது செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாலையில் ரோஜா விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்