அமர்நாத் யாத்திரை செல்வதற்கான அனுமதி படிவத்தை போலியாக தயாரித்து பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக, ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய படிவத்தை தயாரிக்க அமர்நாத் கோயில் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. யாத்திரையில் பங்கேற்பதற்கான அனுமதியை பெற கோயில் வாரியம் அறிவித்துள்ள வங்கிகளிடமிருந்து பக்தர்கள் விண்ணப்பங்களை பெற்று, அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அமர்நாத் கோயில் வாரிய தலைவரான, ஜம்மு – காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த புதிய படிவத்தை தயாரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய முறையில் படிவங்களை அச்சிடுவதற்கு ரூ.75 லட்சம் செலவாகும் என்று கோயில் வாரிய முதன்மை செயல் அதிகாரி நவீன் கே.சவுத்ரி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago