கடந்த 17 ஆண்டுகளாக நடை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட நால் வரும் ஆஜராகவில்லை. அதற் கான விளக்கத்தை ஜெயலலிதா வின் வழக்கறிஞர் பி.குமார் தாக்கல் செய்தார். இதனை அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அசையும் சொத்துக் களை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியிலிருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று தர்மபுரி எம்.பி.தாமரைச்செல்வன் ஏற் கெனவே தாக்கல் செய்திருந்த மனு மீதான வாதம் தொடங்கியது.
அப்போது நீதிபதி டி'குன்ஹா, "வழக்கு தொடர்பான தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகை கள், பரிசுப் பொருட்கள், கைக்கடி காரங்கள், பட்டுப்புடவைகள், காலணிகள், வாகனங்கள் உள் ளிட்ட அனைத்து அசையும் சொத்து களும் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவை அனைத் தும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது" என்றார்.
அப்போது பேசிய ஜெயலலிதா வின் வழக்கறிஞர் பி.குமார், "சென்னையில் இருந்து பெங்களூர் கொண்டுவரப்பட்ட அசையும் சொத்துகளின் விவரங்களை எங் களுக்கு வழங்க வேண்டும். அந்த சான்று பொருட்களின் பட்டியல் கிடைத்த பிறகே இறுதி வாதத்தைத் தொடர முடியும்.
அதுவரை வழக் கின் விசாரணையை ஒரு வாரத் திற்கு ஒத்திவைக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
ஜெயலலிதா தரப்பின் வேண்டு கோளை ஏற்க மறுத்த நீதிபதி, "அசையும் சொத்துக்கள் தொடர் பான விபரங்களும் பொருட்களின் பட்டியலும் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையும் சென்னை சிறப்பு நீதி மன்றமும் வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட நால்வருக்கும் வழங்கி விட்டது. எனவே, மீண்டும் அந்த பட்டியலை வழங்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் அவர் பேசுகையில், "அன்றைய தினம் நடைபெறும் விசாரணையின்போது வழக்கின் இறுதி வாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும்" என்றார்.
அசையும் சொத்துகள் தொடர்பான தங்களது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டதால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஜெயலலிதா தரப்பு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago